தமிழகத்தில் தலைவர்களின் பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய தினங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11 ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நடைபெற உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதையடுத்து சட்ட ஒழுங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (செப்டம்பர் 9) முதல் இரண்டு மாதத்திற்கு ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். தலைவர்களின் நினைவு நாள், பிறந்தநாள் நிகழ்ச்சிகளுக்கு வருபவர்கள், சொந்த வாகனங்களில் DSP அலுவலகத்தில் உரிய அனுமதி சீட்டு பெற்று வர வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.
விராட் கோலி மீண்டும் நாயகனாக மாறிய தருணம்…, 1021 நாட்களுக்கு பிறகு நிகழ்ந்த அற்புத சதம்!!