தல அஜித்தின் 50வது பிறந்தநாளில் ‘வலிமை’ ரிலீஸ் – படக்குழு தீவிரம்!!

0
Valimai
Valimai

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் 50 வது பிறந்த நாளில் வர நடிக்கும் “வலிமை” திரைப்படத்தை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்குமாரின் 59வது படமான “வலிமை” படத்தின் ரிலீஸிற்க்காக அவரது ரசிகர்கள் அனைவரும் பலத்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் மே 1 அஜித்தின் பிறந்த நாளன்று ‘வலிமை’ திரைப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் சென்ற ஆண்டு அஜித்குமார் “நேர் கொண்ட பார்வை” திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது ஆகும். இந்த படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.இந்த திரைப்படம் மிகவும் வெற்றியானது. நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச். வினோத் “சதுரங்க வேட்டை”, “தீரன் அதிகாரம் ஒன்று” போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“நான் எந்த பாலியல் தொழிலும் செய்யவில்லை” – வீடியோ வெளியிட்ட ரவுடி பேபி சூர்யா!!

இந்நிலையில் “வலிமை” திரைப்படத்தையும் அந்த இயக்குனரே இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக “ஈஸ்வர மூர்த்தி” என்ற வேடத்தில் அஜித் நடிக்கிறார். செப்டம்பர் மாதம் சென்னையில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் அஜித் சிறிய விபத்தில் காயமடைந்த நிலையில் தற்போதும் நடித்து வருகிறார்.

மே 1 அன்று படத்தை வெளியிடுவதற்காக படக்குழுவினர் விடுமுறை கூட எடுக்காமல் வேலை செய்து வருகின்றனர். அஜித்தின் பிறந்த நாளன்று படத்தை வெளியிட்டால் படத்திற்க்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு அது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் நினைக்கின்றனர். இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளரான யுவன் இசையமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here