ஐஐடி & அண்ணா பல்கலையில் பரவும் கொரோனா – கல்லூரிகளில் காய்ச்சல் முகாம் நடத்த திட்டம்!!

0

சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா நோய் தோற்று பாதித்த நிலையில் அவர்களை பார்வையிட்ட சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கொரோனா பரவலை தடுக்க கல்லூரிகளில் மருத்துவ முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு:

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழக மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி 700 மாணவர்களும் பரிசோதனை செய்யப்பட்டு தனித்தனி அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக முதல்வர் இனியன் தெரிவித்தார். மேலும் ஐஐடி நிறுவன மாணவர்கள் 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர்கள் கிங் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மீதமுள்ள மாணவர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு விடுதி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று அவர்களை சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் ஐஐடி வளாகத்தில் நேரில் ஆய்வு செய்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Chennai IIT
Chennai IIT

அப்போது அவர் கூறியதாவது,”கொரோனா தொற்று பாதித்த மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் உடல்நிலை நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். மீதமுள்ள மாணவர்கள் 700 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் ஐஐடி மாணவர்களுக்கு ஏற்பட்ட தொற்று நமக்கு படமாக இருக்கும் எனவும் நோய் தாக்கம் குறைந்து வரும் காலத்தில் இப்படி அதிகமாக தொற்று ஏற்படுவது இயல்பு என தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி – அமெரிக்காவில் முதலாவதாக போட்டுக்கொண்டே பெண் செவிலியர்!!

இந்நிலையில் மாணவர்கள் நலன் கருதி சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மருத்துவமு காம் நடைபெறும்” எனவும் தெரிவித்தார். நேற்று நிலவரப்படி ஐஐடியில் 71 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 79 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here