கொரோனா தடுப்பூசி – அமெரிக்காவில் முதலாவதாக போட்டுக்கொண்டே பெண் செவிலியர்!!

0

கொரோனா தடுப்பு மருந்து பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில் பைசர் தடுப்பு மருந்தை தனது உடலில் செலுத்தி உள்ளார் அமெரிக்காவை சேர்ந்த பெண் செவிலியர். இது சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா தடுப்பு மருந்து:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் கொரோனாவிற்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியும் தீவிரமாக நடை பெற்று வருகிறது. அமெரிக்காவின் ஃபைசர், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த தடுப்பு மருந்துகளை பல கட்டமாக சோதனை செய்து வந்தனர். இந்நிலையில், அந்த தடுப்பு மருந்துகள் சோதனைகளில் வெற்றி பெற்றதால் அமெரிக்க மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த தடுப்பு மருந்துகள் முதலில் முதல்நிலை நோய்த்தடுப்பு பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் முதன் முதலாக கொரோனா தடுப்பு மருந்து ஜியூயிஷ் மெடிக்கல் சென்டரில் அவசர பிரிவில் வேலை பார்க்கும் பெண் செவிலியர் சான்ட்ரா லின்க்சேவுக்கு இன்று காலை 9.30 மணியளவில் செலுத்தப்பட்டது. இதன் மூலம் அமெரிக்கா மருத்துவ வரலாற்றில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட முதல் பெண் அமெரிக்கர் என்ற இடத்தை இவர் பிடித்துள்ளார்.

இந்திய ரயில்வே துறையில் 1.4 லட்சம் காலிப்பணியிடங்கள்!!

சான்ட்ரா தடுப்பு மருந்தை செலுத்திக்கொண்ட போது புகைப்படம் எடுத்துள்ளார். அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார், அந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது. அமெரிக்கர்கள் அனைவரும் அச்சப்படாமல் தடுப்பு மருந்தை செலுத்தி கொள்ள சான்ட்ரா ஒரு முன்னோடியாக இருப்பர் என அமெரிக்க அரசு கூறுகிறது. சான்ராவுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here