தல ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்.. அஜித்வுடன் மூன்றாவது முறையாக இணையும் சூப்பர் டூப்பர் காம்போ!!

0

நடிகர் அஜீத் உடன் அடுத்த படத்தையும் தானே தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்தை இயக்குனர் ஹெச். வினோத் வெற்றிகரமாக முடித்து தருவார் என்று போனி கபூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மூன்றாவது முறையாக கூட்டணி:

தமிழ் திரை உலகத்தில் ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கும் அஜித், மக்களால் செல்லமாக “தல” என்ற அடைமொழியால் அழைக்கப்படுகிறார்.  தற்போது, போனி கபூர் தயாரிப்பில் உருவான வலிமை படம் வருகிற பொங்கலுக்கு திரையிடப்பட உள்ளது.  நடிகர் அஜித் இதற்கு முன், இவரது தயாரிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

இதனை அடுத்து, மூன்றாவது முறையாக போனி கபூருடன் நடிகர் அஜீத் இணைய உள்ளதாக தகவல் வந்துள்ளது.  இந்த படத்தை, இயக்குனர்  ஹெச். வினோத் இயக்குவதன் மூலம் அஜித்க்கு பிடித்த இயக்குனரின் பட்டியலில் இவரும் இணைய உள்ளார்.  ஏற்கனவே வலிமை படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கும் ரசிகர்களுக்கு தற்போது அடுத்த படம் குறித்த தகவல் வந்துள்ளதால் தல ரசிகர்கள் டபுள் ட்ரீட் கிடைத்த சந்தோஷத்தில் உள்ளனர்.

தன் பாய் பெஸ்டியுடன் சண்டை போடும் நடிகை மாளவிகா மோகனன்.. அதுவும் அந்த இடத்தில போயா போடுவிங்க??

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here