Sunday, May 12, 2024

உற்பத்தி குறைந்ததால் டீ தூள் விலை உயர்வு – மக்கள் அதிர்ச்சி!!

Must Read

கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இதனால் பல பாதிப்புகளை மக்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை அடைந்துள்ளது. இது நடுத்தர வர்க்கத்தினரை அதிகமாக பாதித்துள்ளது. தற்போது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் டீ தூள் விலை உயர்ந்துள்ளது.

டீ பிரியர்கள்:

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்தமான பானம் என்று சொன்னால் அது டீ தான். சுறுசுறுப்பாக நம்மை வைத்துக்கொள்ள அனைத்து வயதினரும் டீயினை பருகுவர். இது முளையின் செயல்திறனை அதிகப்படுத்தும். அதே போல் அனைத்து தரப்பு மக்கள் பணத்தினை கணக்கு பார்க்காமல் வாங்கும் ஒரு பானம் ஆகும்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

ஆனால், கொரோனா அச்சம் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து அனைத்து தொழில்நிறுவனங்கள், வர்த்தகம், விவசாயம் என்று அனைத்தும் முடங்கின. அதனால் தேயிலை தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. அதனால் உற்பத்தி அளவு பெருமளவு குறைந்துள்ளது. தேவை அதிகரித்து உற்பத்தி குறைந்துள்ளதால் டீ தூள் விலை தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் உயர்ந்துள்ளது. இந்த விலை நிலவரம் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

விலை நிலவரம்:

சென்னையில் 1 கிலோ த்ரீ-ரோசெஸ் டீ தூள் பாக்கெட் 480 ரூபாயில் இருந்து 530 ஆகலை உயர்த்தப்பட்டுள்ளது. சக்ரா கோல்ட் டீ தூள் 480 ரூபாயில் இருந்து 516 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏவிடி கோல்ட் டே தூள் 410 றுப்பில் இருந்து 510 ஆக துயர் உயர்த்தப்பட்டுள்ளது. இது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -