ஸ்பைசியான “தந்தூரி ஆளு” – ட்ரை பண்ணி பாருங்க!!

0

அனைவருக்கும் மிகவும் பிடித்த காய் என்றால் அது கண்டிப்பாக உருளைக்கிழங்கு தான். அதில் நிறைய வித்தியாசமான உணவு வகைகளை தயாரிக்கலாம். இன்று மிகவும் சுவையான “தந்தூரி ஆளு” ரெசிபி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..!!

தேவையான பொருட்கள்

  • புதினா – 1/4 கப்
  • இஞ்சி – 2
  • பச்சை மிளகாய் – 2
  • கொத்தமல்லி – 1/4 கப்
  • எலுமிச்சை – 1 டீஸ்பூன்
  • உப்பு – 3/4 டீஸ்பூன்
  • சீரகம் தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகு – 1/2 டீஸ்பூன்
  • கருப்பு உப்பு – 1/2 டீஸ்பூன்
  • சில்லி பிளெக்ஸ் – 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய் – 2-3 டீஸ்பூன்
  • உருளைக்கிழங்கு – 20 (சிறியது)
  • கேப்சிகம் – 1/4 கப்
  • வெங்காயம் – 2 ‘
  • கடலை மாவு – 2 டீஸ்பூன்

செய்முறை

முதலில், மிஸ்சியில் புதினா, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாக போட்டு அரைக்க வேண்டும். பின்பு, இதனை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இந்த கலவையில் சீரகம் தூள், சில்லி பிளெக்ஸ், கடலை மாவு, மிளகு தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும். கடைசியாக எண்ணெய் ஊற்றி கலக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.

சிவகார்திகேயனையே கலாய்த்து தள்ளிய ஏ.ஆர்.ரகுமான் – ட்ரெண்டாகும் வீடியோ!!

இதில் உருளைக்கிழங்கு, கேப்சிகம் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். வெங்காயம் மற்றும் கேப்சிகம் இவை இரண்டையும் பெரிதாக நறுக்கி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின்பு, டூத் ஸ்டிக்குகளை எடுத்து கொள்ளவும். அதில் இந்த காய் கறிகளை எடுத்து வைக்க வேண்டும். பின்பு, ஒரு சட்டியை காய வைத்து அதில் இந்த டூத்ஸ்டிக்கை வைக்க வேண்டும். சிறிதளவு எண்ணெய் மட்டும் ஊற்றி அதனை பொரிக்கவும். அவ்ளோ தான்!!!

யம்மியான “தந்தூரி ஆளு” ரெசிபி தயார்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here