ராஜா ராணி சீரியலில் ஒன்று சேர்ந்த அண்ணன் தம்பிகள் – வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் எலியும் பூனையுமாக மோதிக்கொண்டிருக்கும் அண்ணன் தம்பிகள் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஒன்று கூடி கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ராஜா ராணி

விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு நன்றாக ரீச் கிடைத்துள்ள சீரியல் ‘ராஜா ராணி 2’. இந்த தொடரில் பல பொய்களை கூறி சந்தியா, சரவணன் திருமணம் நடக்கிறது. அந்த உண்மைகள் வீட்டுக்கு தெரிய வர சரவணன் வீட்டில் பல பிரச்சனைகள் வெடிக்கிறது. அண்ணன், தம்பி, தங்கை என்று எல்லாரும் சேர்ந்து சந்தியாவுக்கு எதிராக போர்க்கொடி பிடித்துள்ளார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவ்வாறு ராஜா ராணி 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் சரவணானாக சித்துவும், சந்தியாவாக ஆலியா மானஸாவும் நடித்து வருகின்றனர். சீரியலில் இப்படி இருக்க ராஜா ராணி குடும்பம் ஒன்று சேர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்றுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சரவணன், செந்தில் நிகழ்ச்சியின் தொகுப்பாளினி பிரியங்காவை ஓட ஓட விரட்டியுள்ளனர்.

சிவகார்திகேயனையே கலாய்த்து தள்ளிய ஏ.ஆர்.ரகுமான் – ட்ரெண்டாகும் வீடியோ!!

சீரியலில் எலியும் பூனையுமாக சண்டை போட்டு வந்த ராஜா ராணி பிரதர்ஸ் விஜய் டிவி நிகழ்ச்சியில் ஒன்று சேர அந்த நிகழ்ச்சி ஆடலும் பாடலுமாக களை கட்டியுள்ளது. விஜய் டிவி நிகழ்ச்சி நடக்கும் செட்டில் ராஜா ராணி சகோதரர்கள் எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக ராஜா ராணி பிரதர்சுடன் அந்த சீரியலின் சிஸ்டர்களும் சேர்ந்து நிகழ்ச்சியை ஆரவாரமாக்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here