தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல் – உளவுத்துறை எச்சரிக்கை!!

0
Edappadi-K-Palaniswami
Edappadi-K-Palaniswami

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாக உளவுத்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

போலீசார் எச்சரிக்கை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியதில் இருந்தே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். மருத்துவக் குழு, அமைச்சர்கள் குழு என தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை செய்து வருகிறார். இந்நிலையில் மத அடிப்படைவாதிகள் மற்றும் தமிழினவாதிகளிடம் இருந்து முதல்வருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாக உளவுத்துறை போலீசார் எச்சரித்து உள்ளனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

cmo of tamilnadu
cmo of tamilnadu

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்!!

இதனால் முதல்வருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஜூன் 24,25,26 ஆகிய தேதிகளில் முறையே சேலம், கோவை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு முதல்வர் செல்ல இருக்கிறார். எனவே பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 3 மாவட்ட அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட பின்னர் 26ம் தேதி முதல்வர் சென்னை திரும்புகிறார். எனவே வழியில் உள்ள செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here