இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்!!

1
Modi
Modi

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிக்கப்படும் பொழுது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படுவதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைபவர்கள் விகிதம் அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் 4.4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

PM Modi
PM Modi

நோவக் ஜோகோவிச்க்கு கொரோனா ” பாசிட்டிவ்” – டென்னிஸ் சீசன் நிறுத்தப்பட்டது..!

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூடுகிறது. அதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கால் ஏற்பட்டு உள்ள பொருளாதார இழப்புகளை நடவடிக்கைகளை சரி செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸின் வீரியம் அதிகரித்து உள்ள நிலையில் ஜூன் 30க்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்தும் முடிவு எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here