Saturday, May 4, 2024

நோவக் ஜோகோவிச்க்கு கொரோனா ” பாசிட்டிவ்” – டென்னிஸ் சீசன் நிறுத்தப்பட்டது..!

Must Read

புகழ் பெற்ற டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது மனைவி ஜீலேனாவிற்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நோவக் ஜோகோவிச்:

டென்னிஸ் தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கத்தின் தரவரிசைப் பட்டியலில் உலகின் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளவர் ஆவார். இது வரை 15 முறை கிராண்ட் சிலாம் எனப்படும் பெருவெற்றித் தொடர் (டென்னிசு) பட்டங்களை பெற்றுள்ளார். நான்கு பெருவெற்றித் தொடர்களிலும் வென்று சாதனை படைத்துள்ளார்.

Novak-Djokovic
Novak-Djokovic

சிறந்த டீனிஸ் வீரர் ஆவார். 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் லண்டனில் நடந்த விம்பிள்டன் ஆடவர் இறுதிச்சுற்றுகளில் வென்று விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். இரண்டு முறையும் இவருக்கு எதிராக ஆடி, தோல்வி அடைந்தவர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோசர் பெடரர் ஆவார்.

கொரோனா தொற்று:

கிரிகர் டிமிட்ரோவ், போர்னா கோரிக் மற்றும் விக்டர் ட்ரொய்கி ஆகியோருடன் அடுத்தபடியாக இவருக்கு கொரோனா பரிசோதை மேற்கொள்ள பட்டதில் பொசிட்டிவ் என்று உறுதி செய்ய பட்டு உள்ளது. இவரது குடும்பத்தில் இவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Novak-Djokovic-wife-child
Novak-Djokovic-wife-child

ஆனால், குழந்தைகளுக்கு நெகடிவ் என்று வந்து உள்ளது. அவர் கூறுகையில்” எனக்கு எந்த வித அறிகுறியும் காட்டவில்லை. இது யாருடைய உடல்நிலையையும் சிக்கலாக்காது என்றும் எல்லோரும் நலமாக இருப்பார்கள் என்றும் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

நேபாளத்தில் கொடூரம் ஆண்களை குறிவைத்து தாக்கும் கொரோனா..!

இந்த தொடர் தோற்று பாதிப்பால் காரணமாக டென்னிஸ் சீசன் நிறுத்தப்பட்டு உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக மக்களே., இந்த பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை., மின் துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் கோடை வெயில் உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் துணை மின் நிலையங்களில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -