தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? மருத்துவக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை..!

0
Tamilnadu CM
Tamilnadu CM

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் வரும் ஜூன் 29ம் தேதி மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பா?

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தினமும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை விதித்தார். மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்து ரத்து, உணவகங்களில் பார்சல் மட்டும் உள்ளிட்ட விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Medical Team
Medical Team

16 வயது டிக்டாக் பிரபலம் சியா கக்கார் – டெல்லியில் தற்கொலை..!

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட அன்லாக் 1.0 எனப்படும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு வரும் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் ஜூன் 29ம் தேதி மருத்துவக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். ஒவ்வொரு முறையும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு முன்பு மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கை தளர்த்தலாமா? அல்லது நீட்டிக்கலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here