1,300 வங்கி ஊழியர்கள் உயிரிழப்பு – வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தகவல்!!!

0

தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலையால் இதுவரையிலும் 1300 வங்கி ஊழியர்கள் இறந்துள்ளதாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

1,300 வங்கி ஊழியர்கள் உயிரிழப்பு:

கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. நோய் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை 2.4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,66,200 பேர் பலி ஆகியுள்ளனர். இதனால் சில மாநிலங்களில் ஊரடங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இருந்த போதிலும் ஊரடங்கு காலத்தில் வங்கிச் சேவைகள் அத்தியாவசிய வி‌ஷயங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு வங்கிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் முன்களப் பணியாளர்களாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள வங்கி சேவைகளில் 50 சதவீத ஊழியர்களுடன் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

இதனை தொடர்ந்து இந்திய வங்கிகள் அமைப்புக்கு (IBA) அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் இதுவரை நாடு முழுவதும் சுமார் 1,300 வங்கி ஊழியர்கள் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் இது 0.10 சதவீதமாகும் என்று கூறினார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here