தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்பு உதித்த சூரியன் – கொண்டாடும் தொண்டர்கள்!!

0

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று(மே 2) நடைபெற்றது. அதில் திமுக கூட்டணி கட்சி பெரும்பாலுமான இடத்தில் வெற்றிபெற்று தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

திமுக:

தமிழகத்தில் நடப்பு மாதமான மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட் காலம் முடிவுக்கு வரவவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் தேர்தல் ஆணையம் அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றி மிக சிறப்பாக நடத்தியது. மேலும் அதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் நடக்கின்ற ஆட்சி தொடருமா அல்லது புதிய ஆட்சி வருமா என்ற எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்று (மே 2) வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே திமுக கூட்டணி தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. திமுகவின் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் மிக பெரிய அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தினர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

முடிவில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. அதில் திமுக கட்சி மட்டும் 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்பு தமிழகத்தில் மீண்டும் உதய சூரியன் உதித்துள்ளது. இதன் காரணமாக திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர். மேலும் தமிழகத்தின் 8வது முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here