இசை உலகின் மேஸ்ட்ரோ – இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..!

0

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் இளைய ராஜா. இவர் 1976 இல் வெளிவந்த அன்னக்கிளி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவரின் மச்சான பாத்தீங்களா’ பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இன்று அவர் பிறந்தநாளையொட்டி அவருக்கு பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜா

தன் இசை திறமையால் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கட்டிபோட்டுள்ளார் இசைஞானி இளையராஜா. தமிழகத்தின் பாரம்பரிய இசையை, கடல் கடந்து சிறப்புற செய்ததில் இளையராஜாவின் பங்கு மிக அதிகம்.

அதிலும் குறிப்பாக, இசை என்பது குறிப்பிட்ட சாரார் மட்டுமே கேட்கவும், ரசிக்கவும் முடியும் என்று இருந்த காலகட்டத்தில், சாமானியனையும் ரசிக்க செய்தவர் ராஜா மட்டுமே.

இசை மழை

தற்போது உள்ள காலகட்டத்தில் மன அழுத்தம் என்ற ஒன்று மக்களிடையே பெரிதும் காணப்படுகிறது. அப்படி பட்டவர்களுக்கு இவரின் இசை ஒரு மாமருந்து. கல்லுடைப்பவர் முதல் வாட்ச்மேன் வரை கஷ்டங்களை மறந்து வேலை செய்வது இவரின் இசையில் தான். 1976 இல் ஆரம்பித்த இவரின் பயணம் 1000 படங்களை எட்டியுள்ளது.

Ilaiyaraaja composes his first corporate song for Hindustan Coca ...

நாடக குழுவில் இசைக் கச்சேரிகளுக்கும், நாடகங்களுக்கும் பகுதிநேர வாத்தியக் கலைஞராக சலில் சௌத்ரியிடம் வேலை செய்து வந்த ராஜா, பின்னர் கன்னட இசையமைப்பாளரான ஜி.கே வெங்கடேஷிடம் உதவியாளராக சேர்ந்தார்.அவரது இசைக்குழுவில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்திருக்கிறார். இந்த நேரத்தில் தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தின் போது, சுயமாக பாடல்களை எழுதி, தான் இருந்த இசைக் குழுவில் அங்கம் வகித்த கலைஞர்களை, அதற்கு இசை அமைக்கும் படி கேட்டுக் கொள்வாராம்.

இளையராஜா படைப்புகள்

இவரின் படைப்புகளான ’ஆறிலிருந்து அறுபது வரை’, ’16 வயதினிலே’, ’நூறாவது நாள்’, ’ஆனந்த்’, ’கடலோர கவிதைகள்’, ’கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ’ஆண்டாள் அடிமை’, ’ஆராதனை’, ’ஆத்மா’, ’ஆவாரம்பூ’, ’அபூர்வ சகோதரர்கள்’, ’அடுத்த வாரிசு’, ’மூன்றாம் பிறை’, ’பயணங்கள் முடிவதில்லை’,

’குங்குமச்சிமிழ்’, ’உதயகீதம்’, ’இதயகோயில்’, ’முள்ளும் மலரும்’, ’மௌன ராகம்’, ’முதல் மரியாதை’, ’அலைகள் ஓய்வதில்லை’, ’அம்மன் கோவில் கிழக்காலே’, ’குணா’, ’காக்கிச்சட்டை’, ’நாயகன்’, ’காதலுக்கு மரியாதை’ என சொல்லி கொண்டே போகலாம். ஒவ்வொரு படத்திலும் தன் வித்தியாசமான இசை திறமையை வெளிப்படுத்தியிருப்பார்.

விருதுகள்

தமிழ் மட்டும் அல்லது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி என பல மொழிகளில் இசையமைத்துள்ளார் சிம்பொனி இசையமைப்பு, ’பஞ்சமுகி’ என்ற கர்நாடக ராகம் உருவாக்கம், இசை ரசிகர்களுக்கு புதிய பரிணாமத்தை அறிமுகம் செய்த, ’ஹவ் டு நேம் இட்’, ’கீதாஞ்சலி’ என்ற பக்தி இசைத் தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் செய்துள்ளார்.

தனது இசைக்காக இந்திய அரசின் உயரிய விருதான, ’பத்ம விபூஷண்’ விருதையும், 5 முறை தேசிய விருதையும், தமிழக அரசின் ’கலைமாமணி’ விருதையும் பெற்றுள்ள இவர், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் இசையை போல மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற இசைஞானி இளையராஜாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here