பிரபல நடிகரான ராமராஜனுக்கு கொரோனா தொற்று – அதிர்ச்சியில் திரையுலகம்!!

0

கொரோனா தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. பல பிரபலங்களும், திரையுலகினரும் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. தற்போது பிரபல நடிகரான ராமராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ராமராஜன்

தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராவும் இருந்தவர் ராமராஜன். 1977 இல் வெளியான ‘மீனாட்சி குங்குமம்’ படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். ராமராஜன் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கலர் கலரான சட்டை தான். பல படங்களுக்கு பிறகு ‘கரகாட்டக்காரன்’ திரைப்படமே இவருக்கு அதிக புகழை தேடி தந்தது. கிட்ட தட்ட ஒரு வருடம் இந்த படம் ஓடியது.

ramarajan
ramarajan

அதன்பிறகு ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ என்ற படத்தை இயக்கினார். இவர் நடித்து கொண்டிருக்கும் போதே தமிழ் நடிகையான நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 1998 இல் திருச்செந்தூர் லோக்சபா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அதிமுக எம்.பி ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ramarajan nalini
ramarajan nalini

இந்நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கிண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here