ஏறி, இறங்கும் தங்கத்தின் விலை – குழப்பத்தில் மக்கள்!!

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்து உள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் ஊரடங்கு தொடர்வதால் வரும் நாட்களிலும் விலை உயரவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தங்கத்தின் விலை:

உலக பொருளாதாரத்தையே கட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனாவால் இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தங்க விற்பனை குறைவாகவே இருந்தாலும் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. இதற்கு முக்கிய காரணம் முதலீட்டாளர்கள்களுக்கு பங்குச்சந்தையின் மீது ஏற்பட்ட நம்பிக்கையின்மையை. தங்கத்தின் மீது முதலீடு செய்தவர்களுக்கு லாபம் பன்மடங்கு உயர்ந்து இருப்பதால், அதன் விற்பனையை பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆசிய நாடுகளில் ஆபரணப் பொருளாக பார்க்கப்படும் தங்கம், மற்ற நாடுகளில் வெறும் முதலீட்டு பொருளாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அந்நாடுகளில் தங்கத்திற்கு வைப்பு வட்டி விகிதம் இல்லாத காரணத்தால் பங்குச்சந்தையின் மீதே அதிக முதலீடுகள் செய்யப்படுகின்றன. இதனாலே தங்கத்தின் இறக்குமதி பெருமளவு குறைந்து இருந்தாலும் அதற்கான தேவை அதிகமாகவே உள்ளது. மேலும் வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை உயர்வதற்கே அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

1 முதல் 12ம் வகுப்பு வரை 40% பாடத்திட்டங்கள் குறைப்பு – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை ரூ.18 குறைந்து 4,937 ரூபாய்க்கும், ஒரு சவரன் 144 ரூபாய் அதிகரித்து ரூ.39,496 க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.70.20 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here