கேஸ் சிலிண்டர் பதிவு சேவையில் தமிழ் திடீர் நீக்கம்.., வெடித்த சர்ச்சையால் சிக்கலை சரி செய்த ஆயில் நிறுவனம்!!!

0

இண்டேன் கேஸ் சிலிண்டரை பதிவு செய்யும் சேவையில் தமிழ் மொழி நீக்கப்பட்டதால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. மேலும் இது குறித்து மார்க்சிஸ்ட் எம்பி வெங்கடேசன் கூட நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் எப்படி விதிகளை மீற முடியும்?? அதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?? உடனடியாக தமிழ் சேவையை அமல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இவரை தொடர்ந்து பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது இந்திய ஆயில் தலைமை பொது மேலாளர் செல்வகுமார் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது கடந்த ஒன்றாம் தேதி இந்திய ஆயில் நிறுவனம் ஏர்டெல்லில் இருந்து ஜியோவிற்கு மாறியதால் சிஸ்டத்தில் இருந்து சில சிக்கலால் தமிழ் மொழி நீக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த சிக்கல் அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளதால் வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்து இந்தியன் கேஸ் சிலிண்டரை பதிவு செய்து கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here