13வது உலக கோப்பை தொடர் இந்திய மண்ணில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றனர். இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை என அனைத்து அணிகளையும் பேட்டிங், பௌலிங் மூலம் பட்டையை கிளப்பி வருகிறது.
இது மட்டுமல்லாமல் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை தக்க வைத்துள்ளனர். இப்படி தொடர்ந்து அதிரடி காட்டி வரும் இந்திய அணி இன்று நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்குள் அடி எடுத்து வைக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம். அது மட்டுமல்லாமல் இந்த உலக கோப்பையில் விராட், ரோகித் பேட்டிங்கில் அசத்தி வருகின்றனர். அதே போன்று பவுலிங்கில் ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா ஆகியோர் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகின்றனர்.