உலக நாயகனின் அடுத்த படத்தில் இணையும் பா.ரஞ்சித் – வெளியானது மாஸ் அப்டேட்!!

0

நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தை அடுத்து, அவரது அடுத்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

முக்கிய கூட்டணி:

உலக நாயகன் கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.  பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  இந்த படம், விரைவில் திரைக்கு வரவுள்ளது.  இந்த படத்தை அடுத்து, கமல் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடித்து முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, இந்த படம் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத் தகுந்தது. இந்த படங்களை அடுத்து நடிகர் கமல் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் கூட்டணி அமைய உள்ளதாக தெரிகிறது.  இந்த படத்தை ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த கூட்டணி  மீது ரசிகர்களுக்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here