நடிகை தமன்னா 15 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். தமன்னாவின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் அடங்கிய அழகிய ஆல்பத்தை வீடியோவாக எடுத்து ரசிகர்களுக்கு இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
பாடம் கற்றுக்கொள்வோம் ஆ..!
கொரோனா வைரஸ் மனித சமூகத்திற்கு பெரும் பாடமாகவே அமைந்துள்ளது. இயற்கையை தாண்டி செயற்கையை நோக்கி ஓடிய மனித இனம், தற்போது மீண்டும் இயற்கை பக்கமாகவே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வருகிறது. ஆனால் இந்த பாடத்தில் இருந்து நல்ல படிப்பினையை நாம் கற்றுக் கொள்வோமா என்பது சந்தேகம் தான்.
குழந்தையாக மாறிய தமன்னா..!
21 நாட்கள் இந்தியா முழுவதும் லாக் டவுனை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில் தமன்னாவின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் அடங்கிய அழகிய ஆல்பத்தை வீடியோவாக எடுத்து ரசிகர்களுக்கு காட்டி வருகிறார். தமன்னா குழந்தை பருவத்தில் இன்னமும் க்யூட்டாக இருக்கிறார்.
யோகா தான் காரணம்..!
15 ஆண்டுகளாக சினிமாவில் அதே அழகையும் கட்டுக் கோப்பான உடலையும் நடிகை தமன்னா மெயின்டெயின் செய்து வர அவர் செய்யும் யோகா தான் முக்கியக் காரணம். இந்த குவாரண்டின் காலத்திலும், வீட்டுத் தோட்டத்திலும், தனது அறையிலும் நடிகை தமன்னா யோகா செய்யும் வீடியோக்களையும் இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |