Thursday, May 16, 2024

sbi atm

இனிமேல் SBI ATM-ல் பணம் எடுப்பது கடினம் – SBI வங்கி புதிய அறிவிப்பு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களுக்கு இனிமேல் ஏடிம் இல் பணம் எடுப்பதற்கு டூ பாக்டர் ஆதென்டிபிகேஷன் (Two-Factor Authentification) எனும் புதிய முறையை வங்கி நிர்வாகம் அறிமுகம் செய்யவுள்ளது. டூ பாக்டர் ஆதென்டிபிகேஷன் கீழ்கண்ட சிறப்பம்சங்களை கொண்டதாகும்,  மோசடி பண பரிவர்த்தனைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க எஸ்பிஐ ஏடிஎம்களில் புதிய ஓடிபி (OTP) அடிப்படையிலான பணத்தை பெறும் முறை சேர்க்கப்பட்டுள்ளது. புதிய OTP- அடிப்படையிலான பணத்தை பெறும் இந்த முறை ஆனது ஜனவரி 1, 2020 முதல் எஸ்பிஐ ஏடிஎம்களில் தொடங்கும்.  எஸ்பிஐ தற்போது இந்த ஓடிபி அம்சத்தை சோதித்து வருவதால், இந்த முறையானது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே அணுக கிடைக்கும். ரூ.10,000 க்கு மேலான தொகைக்கு மட்டுமே இந்த செயல்முறை தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைப் பயன்படுத்தி பணம் எடுப்பது எப்படி???       இந்த புதிய டூ-ஃபேக்டர் ஆதென்டிகேஷன் முறையின் கீழ் பணத்தை எடுக்க விரும்பும் பயனர்கள், வங்கி உடன் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை கொண்டுள்ள மொபைல் எடுத்துச் செல்வது கட்டாயமாகும்.      நீங்கள் உங்களின் பின் எண்ணை உள்ளிடதும் நீங்கள் கையில் வைத்திருக்கும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பி வைக்கப்படும்.      குறிப்பிட்ட OTP-ஐ டைப் செய்த பின்னரே உங்களால் கோரப்பட்ட பண பரிவர்த்தனை நிகழும். இந்த ஒடிபி ஆனது ஒரே ஒரு பணபரிவர்த்தனைக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதும், வெவ்வேறு பரிவர்த்தனைகளுக்கு பயனர்கள் வெவ்வேறு OTP களைப் பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img