சூரரை போற்று ஹிந்தியில் ரீமேக் செய்ய தடை நீக்கம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!!

0
சூரரை போற்று ஹிந்தியில் ரீமேக் செய்ய தடை நீக்கம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!!
சூரரை போற்று ஹிந்தியில் ரீமேக் செய்ய தடை நீக்கம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!!

தமிழ் திரையுலகில் சக்கைபோடு போட்ட சூரரை போற்று திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான தடை நீக்கப்பட்டதாக சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுரரை போற்று:

சுதா கங்காரா இயக்கத்தில் தமிழில் வெற்றிநடை போட்ட திரைப்படம் தான் ‘சூரரை போற்று’. இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. சூர்யாவின் நடிப்பும் இதில் பிரமாதம் என்றே சொல்லலாம். மக்கள் மனதில் சூர்யா மாறனாக நீங்காத இடத்தை பிடித்து விட்டார்.

சூரரை போற்று ஹிந்தியில் ரீமேக் செய்ய தடை நீக்கம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!!
சூரரை போற்று ஹிந்தியில் ரீமேக் செய்ய தடை நீக்கம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!!

அதிலும் அவருக்கு ஜோடியாக நடித்த அபர்ணாவும் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நாயகியாக மாறி விட்டார். இந்த திரைப்படத்தை சூர்யாவின் சொந்த நிறுவனமான 2டி என்டர்டைன்மெண்ட் மற்றும் அபூன்டான்டியா என்டர்டைன்மெண்ட் இணைந்து ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்தது. இதனை அதிகாரபூர்வமாக அந்த நிறுவனமே அறிவித்திருந்தது.

சூரரை போற்று ஹிந்தியில் ரீமேக் செய்ய தடை நீக்கம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!!
சூரரை போற்று ஹிந்தியில் ரீமேக் செய்ய தடை நீக்கம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!!

இந்த திரைப்படத்தை தயாரித்த இணை நிறுவனமாகிய சீக்யா என்டர்டைன்மெண்ட் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய தடை விதித்து வழக்கு தொடர்ந்திருந்தது. அதுவும் 2டி என்டர்டைன்மெண்ட் மற்றும் அபூன்டான்டியா என்டர்டைன்மெண்ட் இணைந்து இந்த படத்தை வெளியிட கூடாது என்று வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளனர். கூடிய விரைவில் சூரரை போற்று திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here