ஓலா நிறுவனத்தின் அறிவிப்பு – எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர்கள் அதிரடி விற்பனை!!

0
ஓலா நிறுவனத்தின் அறிவிப்பு - எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர்கள் அதிரடி விற்பனை!!
ஓலா நிறுவனத்தின் அறிவிப்பு - எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர்கள் அதிரடி விற்பனை!!

ஓலா நிறுவனத்தின் அடுத்த திட்டமாக எஸ்1, எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர்கள் வருகிற அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார ஸ்கூட்டர்கள் :

ஓலா நிறுவனம் தனது சிறப்பான அதிரடி அறிவிப்புகளால் அதன் வாடிக்கையாளர்களை அடிக்கடி மகிழ்விக்கும். இந்த நிலையில் மின்சார ஸ்கூட்டர்கள் பற்றிய ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த நிறுவனம் சில நாட்கள் முன்பு PAY AND BUY என்ற ஒரு திட்டத்தின் மூலம் பழைய கார்களை வாங்கவும், விற்கவும் ஒரு புதிய தளத்தை ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்து இருந்தது கவனிக்கத்தக்கது.

ஓலா நிறுவனத்தின் அறிவிப்பு - எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர்கள் அதிரடி விற்பனை!!
ஓலா நிறுவனத்தின் அறிவிப்பு – எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர்கள் அதிரடி விற்பனை!!

இந்த நிலையில், இதன் அடுத்த திட்டமான ஓலா எஸ்1, எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பெரும்பாலான நகரங்களில் ஸ்கூட்டர்களின் டெலிவரி அக்டோபரில் தொடங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், இதில் எஸ் 1 ரக ஸ்கூட்டர் 1,00,00 ரூபாய் எனவும், எஸ்1 ப்ரோ 1,30,000 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் விரைவில் இந்த சேவையை பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா நிறுவனத்தின் அறிவிப்பு - எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர்கள் அதிரடி விற்பனை!!
ஓலா நிறுவனத்தின் அறிவிப்பு – எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர்கள் அதிரடி விற்பனை!!

மேலும், இந்த மின்சார ஸ்கூட்டர்களில் மணிக்கு 115 கிலோமீட்டர் வேகத்தில் 181 கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்யலாம் எனவும், ஒரு முறை சார்ச்சிங் செய்ய 40 நிமிடங்கள் வரை மட்டுமே தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், கூடுதல் சிறப்பம்சமாக, மாதம் 3000 ரூபாய் என்கிற எளிய மாதத் தவணையில் ஸ்கூட்டரை விற்பனை செய்ய எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட சில வங்கிகளுடன் இந்த நிறுவனம் உடன்பாடு செய்து கொண்டுள்ளதாகவும் அறிவிப்பு வந்துள்ளது. இதனால் இதன் பயனர்கள் மிகவும் மகிழ்வடைந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here