திருமணமாகி பல வருடங்கள் கழித்து தாயான சன் டிவி பிரபலம் – அழகான பெண் குழந்தையை பெற்றார்!

0
ஆடி ஓடி ஒருவழியாக முடிவுக்கு வந்த எட்டு வருட சன் டிவி சீரியல் - வருத்தத்தில் இல்லத்தரசிகள்!!
திருமணமாகி பல வருடங்கள் கழித்து தாயான சன் டிவி பிரபலம் - அழகான பெண் குழந்தையை பெற்றார்!

சன் மியூசிக் சேனலில் புகழ் பெற்ற விஜேவாகவும், முன்னணிப் பாடகியாகவும் திகழ்ந்து வந்த தியா மேனன், தற்போது அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

பெண் குழந்தை:

90ஸ்  காலகட்டத்தில்  சன் மியூசிக் சேனலில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய விஜேக்கள் மிகப் பெரிய அளவில் ரீச் அடைந்தனர். அந்த வகையில், விஜே தியா மேனன், சன் மியூசிக்கில் 2k கிட்ஸ் கொண்டாடும் புகழ்பெற்ற தொகுப்பாளினியாக  விளங்கி வந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இது மட்டுமல்லாமல், சூப்பர் சேலஞ்ச், சவாலே சமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். பிரபல கிரிக்கெட் வீரர் கார்த்திக் சுப்பிரமணியம் என்பவரை காதலித்து கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் விஜய் நடித்த வில்லு படத்தில் வரும் தீம்தனக்கா தில்லானா உள்ளிட்ட ஒரு சில பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.

இந்த நிலையில், அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த தியா, தற்போது அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். திருமணமான 6 ஆண்டுகள் கழித்து அவருக்கு குழந்தை பிறந்துள்ளதால் தற்போது அவர் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here