பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டு மருமகள் என்ன செய்றாங்கன்னு பாருங்களே – வைரலாகும் புகைப்படம்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சுஜிதா. தற்போது லாக்டவுனில் வீட்டில் இருக்கும் அவர் சேலையில் நடத்திய போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய கதாபாத்திரங்கள் இணைந்து மேலும் சுவாரசியங்கள் ஏற்படுத்தி வருகிறது. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் தனம். குடும்பத்திற்காக ஒருவரால் இந்த அளவிற்கு தியாகம் செய்ய முடியுமா?? என்று யோசித்து பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல முடியும்.

தம்பிகளை வளர்த்து இவ்வளவு பெரிய ஆளாக்கி தன் வாழ்க்கையையே தொலைத்து விட்டார். இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு தனம் இப்பொழுது தான் கர்ப்பமாக உள்ளார். இதனால் குடும்பமே கொண்டாட்டத்தில் உள்ளது.

மேலும் தனமும், மூர்த்தியும் திருமணம் செய்து கொண்ட கதையும் சமீபத்தில் வெளியானது. இதனால் தனத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.

மேலும் சுஜிதா சிறு வயதில் இருந்தே நடித்து வருபவர் என்பதால் வெள்ளித்திரையில் ஏற்கனவே அவருக்கு ஆதரவு அதிகம் உள்ளது. தற்போது லாக்டவுனில் வீட்டில் இருக்கும் சுஜிதா அழகிய புடவையில் ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here