கொரோனா 3அம் அலை குழந்தைகளை தாக்கும் அபாயம் – தமிழகத்தின் நிலை என்னவாகும்???!!!

0

நாட்டில் தற்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்திருக்கும் நிலையில், தற்போது மூன்றாம் அலை குழந்தைகளை கடுமையாக தாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனா 3அம் அலை குழந்தைகளை தாக்கும்:

உலகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்னரும் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் குறைந்தப்பாடில்லை. கொரோனா முதல் அலையை விட; கொரோனா இரண்டாவது அலை மக்களை அதிகம் பாதித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மூன்றாம் அலை குழந்தைகளை கடுமையாக தாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கொரோனா வைரஸ் தொடர்ந்து உருவ மாறுபாடு அடைந்து வரும் நிலையில் உலகத்தின் சில நாடுகளில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா மூன்றாம் அலை நேரிட்டால், குழந்தைகளை மிகவும் எச்சரிக்கையுடன் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்கள் 16 வயதுக்கு கீழே இருக்கும் குழந்தைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர். தற்போது சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை 12-15 வயதுக்குட்பட்டவர்களில் அவசரகால பயன்பாட்டிற்காக ஃபைசர் தடுப்பூசியை அனுமதித்துள்ளன. ஆனால் இந்தியாவில் குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசியை மத்திய அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here