காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் இருந்து விலக்கா..? செங்கோட்டையன் விளக்கம்..!

0
Minister Sengottaiyan
Minister Sengottaiyan

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் வேளையில் வரும் ஜூன் 15ம் தேதியில் இருந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளன. இதில் காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு விலக்கம் அளிப்பது குறித்து அமைச்சர் அவர்கள் விளக்கம் அளித்தார்.

பொதுத்தேர்வுகள்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 15ம் தேதி முதல் தொடங்க உள்ளன. மேலும் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு விடுபட்ட பாடங்களுக்கு மட்டும் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது. ஹால்டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு அதில் தகவல்களை அறிந்து கொள்வதற்கு தொடர்பு எண்ணும் வழங்கப்பட்டு உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

நீட் தேர்வு முடிவுகள் சட்ட விரோதமானது – நீதிமன்றத்தில் வழக்கு..!

கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் வேளையில் தேர்வுகளை நடத்துவது என்பது மாணவர்களின் உடல்நலத்தை பாதிக்கும் என கருத்துகள் தெரிவிக்கப்பட்ட பொழுதும் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என அரசு தெரிவித்து இருந்தது. இதற்காக சொந்த ஊரில் இருக்கும் மாணவர்கள் தேர்வு நடைபெற உள்ள ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். ஒரு அறைக்கு 10 பேர் தான் அனுமதி என்பதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதித்த பின்பே தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் 10 மணிக்கு தொடங்க உள்ள தேர்வுக்கு மாணவர்கள் 9.45க்குள் வர வேண்டும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here