பிரதமர் மோடியுடன் உரையாடிய ஸ்டாலின் – எதற்காக தெரியுமா??

0

பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக உரையாடி உள்ளார். அதில் மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு குறித்து ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

பிரதமருடன் உரை:

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் (OBC) சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில், அகில இந்திய இடங்களில் 50 சதவீதத்தை ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு கூறினர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றலாம் என அதிரடி தீர்ப்பினை வழங்கியது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்தனர். மேலும் இது குறித்து 3 மாதங்களில் முடிவு எடுக்குமாறு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

MK Stalin
MK Stalin

‘கடவுள் ராமரின் விருப்பம்’ – அயோத்தி விழாவிற்கு முதல் அழைப்பைப் பெற்ற முஸ்லீம் வழக்கறிஞர்!!

இந்நிலையில் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய ஸ்டாலின், மத்திய & மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை விரைவில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த குழு விரைவில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆலோசித்து மூன்று மாதங்களில் மத்திய அரசு முடிவெடுக்குமாறு அளித்த தீர்ப்பினை உடனடியாக செயல்படுத்த ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here