தேர்வு இல்லாமல் அரசு வேலை., இந்த தகுதி இருந்தால் போதும்? தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

0
தேர்வு இல்லாமல் அரசு வேலை., இந்த தகுதி இருந்தால் போதும்? தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!
தேர்வு இல்லாமல் அரசு வேலை., இந்த தகுதி இருந்தால் போதும்? தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

மத்திய, மாநில அரசு துறைகளில் பணிபுரிய பலரும் TNPSC, SSC உள்ளிட்ட பல்வேறு தேர்வாணையத்தின் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் போட்டி தேர்வு இல்லாமல் நேர்காணல் மூலம் மட்டுமே அரசு பணியில் சேர்வதற்கான அறிவிப்பும் அவ்வப்போது வெளியாகிறது. அந்த வகையில் தெற்கு ரயில்வேயில் ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் (JTA) பதவிகளில் 14 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

கல்வித்தகுதி:

அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பு அல்லது சிவில் இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி. / எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு.

விண்ணப்பிப்பது எப்படி?

https://sr.indianrailways.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணம் ரூ.500 செலுத்தி அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பெண்கள் மற்றும் எஸ்.சி./ எஸ்.டி. பிரிவினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது. கூடுதல் விவரங்கள் PDF வடிவில் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here