ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்தில் அதிக லைக்குகளை குவித்த முக்கிய படங்கள்.., முழு லிஸ்ட் இதோ!!

0
ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்தில் அதிக லைக்குகளை குவித்த முக்கிய படங்கள்.., முழு லிஸ்ட் இதோ!!
ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்தில் அதிக லைக்குகளை குவித்த முக்கிய படங்கள்.., முழு லிஸ்ட் இதோ!!

படத்தின் ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்தில் அதிக லைக்குகளை பெற்ற படங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படங்கள்:

தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களின் டிரைலர் & டீசர் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டுள்ளது. அந்த வகையில் இணையதள யூ டியூப் செயலியில் வெளியான 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களின் டிரைலர் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பது விஜயின் பீஸ்ட் திரைப்படம் தான். நெல்சன் இயக்கத்தில் விஜய் மற்றும் பூஜா லீடு ரோலில் நடித்த பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 2.22M லைக்குகளை பெற்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதற்கடுத்து இயக்குனர் அட்லீ படைப்பில் விஜய் மற்றும் நயன்தாரா நடித்து பட்டையை கிளப்பிய திரைப்படமான பிகில் படத்தின் டிரைலர் வெளியான ஒரு நாளில் 1.66M லைக்குகளை பெற்றுள்ளது. அதன் பின்னர் அஜித் குமார் 2 வது முறையாக வினோத்துடன் கூட்டணி வைத்த வலிமை படத்தின் டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 1.32M லைக்குகளை பெற்றது. இதனை தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்து அசத்திய ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ட்ரைலர் வீடியோ வெளியான ஒரு நாளில் 1.24M லைக்குகளை பெற்றது.

டாப் ஹீரோவை காதலிக்கும் தமன்னா., டேட்டிங்கில் இருக்கும் காதல் ஜோடி! லீக்கான வீடியோ!!

இதற்கடுத்து நடிகர் மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த சர்க்காரு வரி பாட படத்தின் டிரைலர் 1.21M வியூஸ்களை கடந்தது. இதனை தொடர்ந்து அஜித் நடித்த விஸ்வாசம் படம் 1.16M லைக் மற்றும் சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 1.14M லைக்குகளை பெற்றது. மேலும் விஜயின் வாரிசு படத்தின் டிரைலர் எத்தனை மில்லியன் லைக்குகளை பெரும் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here