தமிழக ஒப்பந்த செவிலியர்களுக்கு குட் நியூஸ்., ரூ.18000 சம்பளத்தில் மீண்டும் பணி வழங்க முடிவு!!

0
தமிழக ஒப்பந்த செவிலியர்களுக்கு குட் நியூஸ்., ரூ.18000 சம்பளத்தில் மீண்டும் பணி வழங்க முடிவு!!
தமிழக ஒப்பந்த செவிலியர்களுக்கு குட் நியூஸ்., ரூ.18000 சம்பளத்தில் மீண்டும் பணி வழங்க முடிவு!!

தமிழகத்தில் ஒப்பந்த கால நர்சுகளாக பணியாற்றி வந்த, செவிலியர்களுக்கு மாற்றுப் பணியாக ரூபாய் 18000 ஊதியத்தில், மருத்துவமனையில் மீண்டும் பணி வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.

அரசு முடிவு:

தமிழகத்தில் கடந்த கொரோனா காலகட்டத்தில், மருத்துவமனைகளில் செவிலியர்கள் பற்றாக்குறையை போக்க, 2,300 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். அவர்களின் பதவிக்காலம் கடந்த 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகம் முழுவதும் செவிலியர்களுக்கான காலி பணியிடங்கள் அதிகமாக இருப்பதால், இப்போதைக்கு இவர்களை பணி நீக்கம் செய்ய எந்த முடிவும் அரசு எடுக்கவில்லை என தெரிவித்தார்.

5 முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்.., மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

செவிலியர்களின் நலன் கருதி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களில் மாதம் ரூபாய் 18,000 ஊதியத்தில் இவர்களை ஒப்பந்தத்தில் பணியமர்த்த அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார். இதனால், செவிலியர்கள், சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here