ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடி இதயத்தை பரிசாக கொடுத்த காதலி!!

0

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்கு காதலர் தின பரிசாக ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தை பரிசளித்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பெண்ணிற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

காதலர் தின பரிசு

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 32 வயதான மெரலைஸ் வான் டெர் மெர்வ் என்ற பெண் சிறுவயது துவங்கி விலங்குகளை வேட்டையாடி வந்துள்ளார். இதுவரை சிங்கம், யானை, புலி உள்ளிட்ட 500 விலங்குகளை வேட்டையாடியுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தில் ஒவ்வொரு காதல் ஜோடிகளும் பரிசுகளை பரிமாறிக்கொள்வது வழக்கம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த வகையில் மெரலைஸ் வான் டெர் மெர்வ் என்பவர் பதினேழு வயதுள்ள ஒட்டகச்சிவிங்கியை கொலை செய்து, அதனுடைய இதயத்தை எடுத்து கணவருக்கு பரிசளித்துள்ளார். அவர் பரிசளித்த புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, ‘ஒரு பெரிய ஒட்டகச்சிவிங்கியின் இதயம் எப்படி இருக்கும் என்று யோசித்துளீர்களா? இந்த நாளுக்காக நாட்களை எண்ணிக்கொண்டிருந்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய பதிவுக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்து வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் – மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்!!

கண்டனங்களுக்கு பதிலளித்துள்ள மெரலைஸ் வான் டெர் மெர்வ், தான் செய்த செயலை நியாயப்படுத்தியுள்ளார். ‘தென் ஆப்பிரிக்காவில் வயதான உயிரினங்கள் கொல்லப்படுவது அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களை காப்பாற்றக்கூடிய செயல் ஆகும். இதனால் மக்களுக்கு நிறைய இறைச்சி கிடைக்கிறது’ என்று கூறியுள்ளார் மெரலைஸ் வான் டெர் மெர்வ். இவரின் பதிலை ஏற்றுக்கொள்ளாத விலங்கியல் ஆர்வலர்கள், ‘விலங்குகளை வேட்டையாடுவது கொலை தான். அதிலும் ஆண் விலங்குகளை வேட்டையாடுவது அதன் இனத்துக்கே பாதிப்பை உண்டாக்கும். இது சரியான செயல் அல்ல’ என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here