ஜப்பானில் தற்கொலைகளை தடுக்க அமைச்சகம் – தனி அமைச்சர் நியமனம்!!

0

ஜப்பானில் கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பின்பு தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்கொலைகளை தடுப்பதற்காக தனி அமைச்சகம் ஒன்று ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்கொலை தடுப்பிற்கான தனி அமைச்சகம்

ஜப்பானில் கொரோனா பாதிப்பால் உண்டான பொருளாதார நெருக்கடியால் பல தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஜப்பானில் கடந்த பத்து ஆண்டுகளாக தற்கொலை விகிதங்கள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், மீண்டுமாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கொரோனாவினால் உண்டான பொருளாதார நெருக்கடியால் இளம் வயதுடைய ஆண், பெண் உட்பட பலரும் தங்கள் வாழ்க்கையை முடித்து கொண்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஜப்பானில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்கொலை சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொரோனாவால் இறந்தவர்களை விட, தற்கொலை மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. தனிமையில் இருக்கும் இளைஞர்கள் அதிகமானோர் இத்தகைய தற்கொலை முடிவுகளை எடுப்பதாக பல்வேறு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜப்பானில் உயர்ந்து வரும் தற்கொலைகளை கட்டுப்படுத்தும் வகையில், அந்நாட்டு பிரதமர் யோஷிஹிடே சுகா தனிமைக்கான அமைச்சகம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

#INDvsENG பகலிரவு டெஸ்ட் – உத்தேச 11 அணி வீரர்கள் விபரம்!!

கடந்த 2018ம் ஆண்டு உலகிலேயே முதல் முறையாக பிரிட்டன் தனிமைக்கான அமைச்சகத்தை உருவாக்கியது. இந்த வரிசையில் தற்போது ஜப்பான் இணைந்துள்ளது. தனிமைக்கான அமைச்சகத்தின் அமைச்சராக சகமோட்டோ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது, ‘கொரோனா தொற்றுக்கு இடையே அதிகரித்துள்ள தற்கொலை மரணங்களை குறித்து ஆய்வு செய்ய, ஜப்பான் நாட்டு பிரதமர் செயல்திட்டம் ஒன்றை கேட்டுள்ளார். சமூகத்தில் ஏற்பட்டுள்ள தனிமையை போக்குவதற்கும், மக்களிடையே உள்ள உறவுகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here