புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி – துணைநிலை ஆளுநர் பரிந்துரை!!

0

தற்போது புதுச்சேரியில் எந்த கட்சியும் ஆட்சியில் இல்லாத நிலையில் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வருவதற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரை செய்துள்ளார்.

புதுச்சேரி:

இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் சில அதிர்ச்சியான சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. அங்கு சில நாட்களாக ஆளும் கட்சியின் எம்எல்ஏ.,கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து வந்தனர். இதனால் அந்த கட்சியின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது. இதனை சபாநாயகர் அறிவித்தார். அதனை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநரிடம் சமர்ப்பித்தார். தற்போது புதுச்சேரியில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை.

தமிழக சட்டமன்ற தேர்தல் – மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்!!

இந்நிலையில் புதுச்சேரியில் குடியரசு தலைவரின் ஆட்சியமைக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரை செய்துள்ளார். தற்போது இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் இதற்கான முடிவு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here