சூரப்பா குறித்த ஆவணங்கள் மறைக்கப்படுகின்றன – விசாரணைக்குழு அதிருப்தி!!

0
surappa case
surappa case

அண்ணா பல்கலைக்கழக்தின் துணை வேந்தர் சூரப்பா மீதான நிதி முறைகேடு வழக்கில் விசாரணைக்கு தேவையான ஆவணங்களை அண்ணா பல்கலைக்கழகம் தர மறுக்கிறது என்று விசாரணைக்குழு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

விசாரணைக்குழு:

கடந்த நவம்பர் 11 ம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு ஒன்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான நிதி முறைகேடு வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக விசாரணை நடைபெற்று வருகிறது. சூரப்பா மீதான வழக்குகளை கடிதம் மூலமாகவும் அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் புகார்கள் பெறப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. துணை வேந்தர் சூரப்பா மீது கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலமாக பெறப்பட்ட புகார்களை அனுப்பியவர்களையும் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்குள் மோதல் – வெளியான அதிர்ச்சி தகவல்!!

surappa case

இதை தொடர்ந்து சூரப்பா மீதான முறைகேடுகளை விசாரிக்க தேவையான ஆவணங்களை அண்ணா பல்கலைக்கழகம் தர மறுக்கிறது என நீதிபதி கலையரசன் மீதான விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே சூரப்பா மீதான அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணையில் சுரப்பாவின் கீழ் பணிபுரிந்த நபர்களை விசாரணைக்குழு நேரில் விசாரித்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here