தனுஷ் குடும்பத்தால் கைவிடப்பட்ட அந்த நடிகைக்கு விரைவில் திருமணமா?? வெளியான புகைப்படம்!!

0
தனுஷ் குடும்பத்தால் கைவிடப்பட்ட அந்த நடிகைக்கு விரைவில் திருமணமா?? வெளியான புகைப்படம்!!
தனுஷ் குடும்பத்தால் கைவிடப்பட்ட அந்த நடிகைக்கு விரைவில் திருமணமா?? வெளியான புகைப்படம்!!

வெள்ளித்திரையில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான் நடிகை சோனியா அகர்வால். 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு நாயகியாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கி வந்தார். மேலும் தன்னை வைத்து 7 ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன் போன்ற படங்களை இயக்கிய செல்வராகவனை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இது நீண்ட காலம் நீடிக்கவில்லை. சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவகாரத்த்து பெற்று கொண்டனர். செல்வராகவன் அதன் பிறகு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சோனியா அகர்வால் திருமணம் செய்து கொள்ளவில்லை. தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் நினைத்த அளவிற்கு அவருக்கு படங்கள் கைகொடுக்கவில்லை. மார்க்கெட் சரிந்து விட்டது. ஆனாலும் விடாமல் படங்களில் நடித்து கொண்டு தான் உள்ளார். இப்படி இருக்க இப்பொழுது அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடக்க ஒடுக்கமாக மங்களகரமான தோற்றத்துடன் போட்டோவை ரிலீஸ் செய்துள்ளார். தனுஷ் குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்த இவருக்கு எப்பொழுது கல்யாணம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். பலரும் இந்த காஸ்டியூமை பார்த்து விட்டு கல்யாணத்துக்கு ரெடியாகிடீங்களா?? என்றும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here