ரேஷன் கடையில் இலவச திட்டம்!! அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! அதுவும் இவங்களுக்கு மட்டும் தான்!!

0
ரேஷன் கடையில் இலவச திட்டம்!! அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! அதுவும் இவங்களுக்கு மட்டும் தான்!!
ரேஷன் கடையில் இலவச திட்டம்!! அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! அதுவும் இவங்களுக்கு மட்டும் தான்!!

கொரோனா காலங்களில் அன்றாட தேவைகளுக்கு மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் ரேஷன் கடைகளில் சலுகை விலையிலும் இலவச முறையிலும் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை பெற பிரதமரின் PMGKAY திட்டத்தை மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்காக, ரேஷன் கார்டு தாரர்களின் பொருளாதார அடிப்படையில், பல்வேறு நிறங்களிலான ரேஷன் கார்டுகளை அரசு அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், கடந்த 2 ஆண்டுகள் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு, கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இளஞ்சிவப்பு நிற கார்டுதாரர்களுக்கு இதுவரை இந்த உணவு பொருட்கள் விலைக்கு வழங்கப்பட்டு வந்தது.

முன்னதாக மத்திய அரசால் மஞ்சள் கார்டுகளுக்கு, விலைக்கு வழங்கப்பட்டு வந்த உணவு பொருட்களை கேரள அரசு இலவசமாக வழங்கியது. இதைத்தொடர்ந்து தற்போது இளஞ்சிவப்பு நிற கார்டுதாரர்களுக்கு, இதுவரை விலைக்கு வழங்கி வந்த 4 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ கோதுமையை இனி இலவசமாக வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஏழை, எளிய மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here