அரசு கேட்கும் தகவல்களை தரமறுத்தால் 5 ஆண்டு சிறை தண்டனை – வலைதள கட்டுப்பாடுகள் வெளியீடு!!

0

மத்திய அரசு தற்போது ஓடிடி தளங்களுக்கு புதிய செயல்பாட்டு மற்றும் கட்டுப்பாடு விதிமுறைகளை அறிவித்துள்ளது. தற்போது அதனை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளம்:

சமூகவலைத்தள நிறுவனங்களுக்கும் மற்றும் ஓடிடி தளத்திற்கும் மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதனை மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரகாஷ் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளனர். அதன்படி அவர்கள் கூறியதாவது, ஆபாசம், இனவெறி, சிறார்களுக்கு தீங்கு விளைவிக்கும், இந்தியாவின் ஒற்றுமை, பாதுகாப்பு, நட்பு நாடுகளுடனான உறவு தொடர்பான கருத்துக்களை தடை செய்ய வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீதிமன்றம் அல்லது அரசு நீக்க கூறினால் அதனை 36 மணி நேரத்திற்குள் சமூகவலைத்தள நிறுவனம் நீக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பெண்கள் குறித்த ஆபாச புகைப்படங்களை புகார் வந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும். மேலும் தவறான செய்தியை பரப்பும் முதல் நபர் யார் என்பதையும் கண்டறிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் புகாரை பெறுவதற்கும் அதனை விசாரிப்பதற்கு தனி அதிகாரியை நியமிக்க வேண்டும். புகார் தெரிவிக்க ஆன்லைனில் வசதி ஏற்படுத்த வேண்டும்.

ஓடிடி தளங்களுக்கான கட்டுப்பாடுகள் – மத்திய அரசு அறிவிப்பு!!

மேலும் புகார்கள் அனைத்திற்கும் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அல்லது நீதிமன்றம் தகவல் கேட்டால் அதனை 15 நாட்களுக்குள் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி இல்லையெனில் 5கும் அதிகமான ஆண்டுகள் சிறை தண்டை விதிக்கப்படும். மேலும் ஓடிடி தளங்கள் 13+, 16+, ADULT என படங்களை வகையாக பிரிக்க வேண்டும். மேலும் ஒருவரின் கணக்கை நீக்கினால் அதனை ஏன் நீக்கினோம் என்பதை பயனாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். சைபர் பாதுகாப்பு விசாரணை அல்லது சட்ட விதிமீறலுக்கான விசாரணை அமைப்புகள் கேட்கும் தகவலை 72 மணி நேரத்தில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here