சுத்தோ சுத்துன்னு சுத்தும் இன்டர்நெட் – நெட்ஒர்க் சேவையில் பின்னுக்கு தள்ளப்பட்ட இந்தியா!!

0
computer work stress
computer work stress

இந்தியாவில் நெட்ஒர்க் சேவையின் வேகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில்தான் 5ஜி இணைய சேவை பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் இந்தியர்களை மிகவும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

நெட்ஒர்க் வேகம்:

உலக நாடுகளின் நெட்ஒர்க் வேகத்தினை அளவீடு செய்து அறிக்கை வெளியிடும்  (Ookla) Global Index வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியாவுக்கு 131வது இடம் கிடைத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் இந்த இன்டெக்ஸானது இந்த அறிக்கையை வெளியிடும். தற்போது வெளியிடப்பட்டுள்ள ஜனவரி மாதத்துக்கான அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

indian sim networks

 

ஓடிடி தளங்களுக்கான கட்டுப்பாடுகள் – மத்திய அரசு அறிவிப்பு!!

இந்தியாவில் நெட்டில் பதிவிறக்கம் செய்யப்படும் வேகம் நொடிக்கு 12.41 மெகா பைட்ஸாகவும், பதிவேற்றம் செய்யும் வேகம் நொடிக்கு 4.76 மெகா பைட்ஸாகவும் உள்ளது. டிசம்பர் மாதத்தில் 129 வது இடத்தில் இருந்த இந்தியாவின் நெட்ஒர்க் வேகம் ஜனவரியில் இரண்டு இடங்கள் கீழிறங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் சமீபத்தில் தான் 5ஜி நெட்ஒர்க் பரிசோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா கடைசி 10 இடங்களுக்குள் இருப்பது இந்தியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here