#INDvsENG பகலிரவு டெஸ்ட் – 81 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது மூன்றாவது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர்.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளும் ஏற்கனவே இரண்டு போட்டிகளை விளையாடி உள்ளன. இதில் இரு அணிகளும் தலா 1 முறை தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளனர். மூன்றாவது போட்டி புகழ்பெற்ற அஹமதாபாத் மைதானத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் துவங்கியது. இந்த போட்டியதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 112 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் கிராவிலே 53 ரன்களை அடித்தார். மீதமுள்ள பேட்ஸ்மேன்கள் அனைவரும் இந்திய சுழலில் சிக்கினர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அக்சர் 6 விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதன்பின்பு இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை துவக்கியது. இதிலும் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 145 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

#MUMvsPDC 152 பந்தில் 227 ரன்கள் விளாசல் – பாண்டிச்சேரியை பந்தாடிய ப்ரித்வி ஷா!!

இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா 66 ரன்கள் அடித்து ஆறுதல் கொடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய ரூட் 5 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். தற்போது இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது. இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் திணறி வருகிறது.

இந்த இன்னிங்சில் அக்சர் படேல் கிராவிலே 0, சிப்லே 7, பேரிஸ்டோ 0, ரூட் 19 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இவரை தொடர்ந்து அஸ்வின் ஸ்டோக்ஸ் 25, ஆர்சேர் 0, போப் 12 விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்மூலம் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமாக 400 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

81 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4, அக்சர் படேல் 5 மற்றும் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 49 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here