சமூக ஊடகங்களில் போலி செய்தி பரவுவதால் ஏற்படும் வன்முறை., உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வருத்தம்!!!

0
சமூக ஊடகங்களில் போலி செய்தி பரவுவதால் ஏற்படும் வன்முறை., உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வருத்தம்!!!
இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப், பேஸ்புக், X உள்ளிட்ட சமூக ஊடகங்களில் போலி தகவல்கள் பரவி வருவதால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சமூக ஊடகங்களில் வரும் தகவல்களின் உண்மை தன்மையை ஆராய்ந்து மற்றவர்களுக்கு பகிருங்கள் என மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. இந்த சூழலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளார்.
அதன்படி “சிலர் அரசுக்கு எதிரான கருத்துக்களை விரிவுபடுத்த சமூக ஊடகங்களையே நம்பி இருக்கின்றனர். இதனால் பல வன்முறை சம்பவங்கள் ஏற்படுவதை நாள்தோறும் செய்தி தாளில் படித்து வருகிறோம். பொய் செய்திகள் வேகமாக பரவுவதால் உண்மையான தகவல்களை நீர்த்துப்போகச் செய்து விடுகிறது. எனவே இணையதளங்கள் மூலம் பரவும் போலி செய்திகளை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here