தோல் வியாதிகளை முற்றிலுமாக நீக்க – பாட்டி வைத்தியம்!!

0
allergy
allergy

மனித உடலில் தோல் என்பது மிக முக்கியமான ஒன்று. உடலில் இருக்கும் உள்ளுறுப்புகளுக்கு என்ன அலர்ஜி ஏற்பட்டாலும் இந்த தோல் அறிகுறிகளை காட்டி விடும். மேலும் உடலில் உள்ள வியர்வை இந்த தோல்கள் மூலமே வெளியேற்றப்படுகிறது. இந்த தோல்களில் ஏற்படும் அலர்ஜியை எவ்வாறு தடுப்பது என்பதை இந்த பதிவில் காணலாம்.

தோல் வியாதி

நமது தோல்களில் பல நுண்கிருமிகள் உயிர்வாழ இடமளிக்கிறது. மேலும் இது ரத்தத்தில் கலக்கும்போது தான் நமக்கு தோல்களில் வெடிப்பு, அரிப்பு, சிவந்து போகுதல், தோல் மறைத்து போகுதல். செதில் செதிலாக ஆவது, தேமல் போன்றவை ஏற்படுகிறது. இதனை ஆரம்பத்திலேயே தடுக்க சில மருந்துகளை உபயோகிக்க வேண்டும். இதனை ஆரம்ப கட்டத்திலேயே பார்த்து சரி செய்து விட்டால் சுலபமாக அடுத்து வரமால் தடுக்கலாம்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

skin-allergy
skin-allergy
  • அனைத்து விதமான தோல் நோய்களை தீர்க்க கூடிய சதுர கள்ளியை எடுத்துக்கொள்ளுங்கள். இதனை இடித்து சாறு எடுத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி எடுத்துக்கொள்ளுங்கள். இதனை தோல் வியாதிகள் இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
சதுரக்கள்ளி
சதுரக்கள்ளி
  • மேலும் வேப்பிலையை சதுரக்கள்ளியுடன் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து சிறிது மஞ்சள் சேர்த்து தேமல் இருக்கும் இடத்தில் தடவி காய வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால் உடலில் உள்ள  கிருமிகள் அகலும். தோல் வியாதிக்கு நல்ல பலனை பெறலாம்.
skin problems remedies
skin problems remedies
  • மேலும் வெங்காயத்தை நன்கு அரைத்து அதனை தோல் வியாதி இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் தேமலால் ஏற்பட்ட தடம் நீங்கும்.
  • அதன்பின் முள்ளங்கியை வட்டமாக வெட்டி மோரில் ஊறவைத்து அதனை அரைத்து உடலில் தேய்த்து வந்தால் தோலில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.
  • மேலும் துளசி மற்றும் சுக்கு இவை இரண்டையும் அரைத்து தேமல் இருக்கும் இடத்தில் பத்து போட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நமது தோலில் இருக்கும் நுண்கிருமிகள் அழியும். தோல் பிரச்சனைகளும் ஏற்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here