லூசிபர் படம் தெலுங்கில் தயாராகிறது – இவர்தான் நடிக்கிறாரா??

0
லூசிபர் படம் தெலுங்கில் தயாராகிறது - இவர்தான் நடிக்கிறாரா??
லூசிபர் படம் தெலுங்கில் தயாராகிறது - இவர்தான் நடிக்கிறாரா??

கேரள பிரபல நடிகர் மோகன் லால் நடிப்பில் வெளிவந்த படம் லூசிபர். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது ரசிகர்களிடம் அதிக வரவேற்பும் பெற்ற படமாகும். இப்பொழுது இந்த படத்தை தெலுங்கில் ரிமேக் செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகளையும் தொடங்கிவிட்டனர் பட குழுவினர்.

சிரஞ்சீவி நடிப்பில் லூசிபர்…

கேரள மாஸ் நடிகரான மோகன்லால் கடந்த 2019 ஆம் ஆண்டு நடித்து வெளி வந்த படம் லூசிபர். இந்த படம் மாபெரும் வெற்றியும், வசூல் சாதனையும் படைத்தது. இந்த படத்தை கேரள இயக்குனரும் நடிகருமான பிரித்விராஜ் இயக்கினார். இந்த படத்தில் மோகன்லால், விவேக் ஒபாராய், மஞ்சு வாரியார், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படம் அரசியல் பற்றி மிக அருமையாக எடுக்கப்பட்ட படமாகும். இந்த படத்திற்கு பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணமே இருந்தன, இந்த படத்தில் அரசியல் தலைவர் மறைவுக்கு பின் யார் கட்சி பொறுப்பை ஏற்பார். யார் ஆளுமை செய்வார் மற்றும் வளர்ப்பு மகனுக்கும் மருமகனுக்கும் ஏற்படும் மோதல்கள் மற்றும் ஆக்சன் என பட்டையை கிளப்பிருப்பார் பிரித்விராஜ். படத்தில் பல ட்விஸ்ட்கள் மற்றும் படத்தை மிக விறுவிறுப்பாக எடுத்திருப்பார்.

சிரஞ்சீவி நடிப்பில் லூசிபர்...
சிரஞ்சீவி நடிப்பில் லூசிபர்…

இந்நிலையில் இந்த படத்தை இப்பொழுது தெலுங்கில் ரீமேக் செய்ய போகிறார்கள். தெலுங்கில் இயக்குநர் மோகன் ராஜா இயக்குகிறார். சிரஞ்சீவி தனது 153 வது இந்த படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவந்துள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். அதுமட்டுமில்லாமல் படத்தின் மொத்த படப்பிடிப்புகளை நான்கு மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் திட்டமிட்டு, வருகின்ற ஆகஸ்ட் 13 ஆம் தேதியில் இருந்து ஹைதராபாத்தில் பட பிடிப்பை மீண்டும் தொடங்க உள்ளனர் பட குழுவினர்.

ஃபேஸ்புக் Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here