ஹேமாவிற்கு வீடியோ காலில் முத்தம் கொடுக்கும் பாரதி – பரிதவித்து போன கண்ணம்மா! சூடுபிடிக்கும் கதைக்களம்!!

0
என்னது.., பாரதி கண்ணம்மா ஹேமாவின் அப்பா பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரா?? புது ட்விஸ்ட்டா இருக்கே!!
என்னது.., பாரதி கண்ணம்மா ஹேமாவின் அப்பா பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரா?? புது ட்விஸ்ட்டா இருக்கே!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி கண்ணம்மாவிற்கு கால் செய்து ஹேமாவிடம் பேசுகிறார். மேலும் ஹேமாவை கொஞ்ச கண்ணம்மாவிற்கு என்னவோ போல் ஆகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி ஹேமாவை பிரிந்து இருக்க முடியாமல் தவித்து வருகிறார். எப்படியும் பேசி விட வேண்டும் என்று சௌந்தர்யா போனை திருடி விடுகிறார். அதிலிருந்து கண்ணம்மாவிற்கு கால் செய்ய ஹேமா தூங்கி விட்டதாக சொல்கிறார்.

barathi kannamma

கண்ணம்மா குரலை கேட்டு ஹேமா முழிக்க தன் அப்பாவிடம் பேசுகிறார். பாரதி ஹேமாவின் குரல் கேட்டு கண்கலங்குகிறார். தன்னை நியாபகம் வரவில்லையா?? என்று கேட்கிறார். அதற்கு ஹேமா சமையல் அம்மா சொன்ன கதையில் தூங்கி விட்டதாக சொல்கிறார்.

barathi kannamma

அடுத்ததாக ஹேமா வீடியோ கால் செய்வதாக காலை கட் செய்கிறார். கண்ணம்மா பின்னால் இருக்க ஹேமா பாரதியுடன் வீடியோ கால் செய்கிறார். கண்ணம்மாவை பார்த்ததும் பாரதிக்கு ஒரு மாதிரி இருக்கிறது. ஹேமாவை பார்த்ததும் கண்கலங்குகிறார் பாரதி.

ஹேமா பாரதியை சமாதானம் செய்ய இரவு தூங்குவதற்கு முன்பு என்ன சொல்லுவீங்க என்று சொல்ல பாரதி ஐ லவ் யு என்று சொல்கிறார். பின்னால் கண்ணம்மா இருக்க ஷாக்காகிறார். அடுத்ததாக ஹேமாவிற்கு முத்தம் வேறு கொடுக்க கண்ணம்மா குனிந்து கொள்கிறார்.

அதன் பிறகு காலை கட் செய்ய விடிந்ததும் சௌந்தர்யா பாரதி செய்ததை நினைத்து சிரித்து கொண்டுள்ளார். அதன் பிறகு பாரதி கிளம்பி தனது நண்பனை பார்க்க செல்வதாக சௌந்தர்யாவிடம் பொய் சொல்கிறார். இதனை சௌந்தர்யா கண்டுபிடித்து விடுகிறார்.

அடுத்ததாக கண்ணம்மா லட்சுமி மற்றும் ஹேமாவிற்கு கண்ணம்மா பாடம் சொல்லி கொடுக்கிறார். சௌந்தர்யா பாரதி பின்னால் பாலோவ் செய்து செல்கிறார். பாரதி பூச்செடி தோட்டத்தில் வண்டியை நிறுத்தி ரோஜா செடியை வாங்குகிறார். அப்பொழுது பார்த்து வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. சௌதர்யா வந்து என்ன என்று கேட்க பாரதி ஷாக்காகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here