எங்கடி உங்க அப்பா.., மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விஜயா.., சிக்கித்தவிக்கும் ரோகினி!!

0
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி கர்ப்பமாக இருக்கிறார் என்ற விஷயம் தெரிந்து விஜயா தலைகால் புரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறார். ஆனால் மருத்துவர் அவரை பரிசோதித்து விட்டு கர்ப்பமாக இல்லை என சொல்லி விடுகிறார். இதை வீட்டில் வந்து விஜயாவிடம் சொல்ல அவர் அதிர்ச்சியாகிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் ரோகினியின் அப்பா பற்றி கேட்க ஆரம்பிப்பாராம்.

மேலும் இனியும் உங்க அப்பா வரலை என்றால் நான் சும்மா இருக்க மாட்டேன். ஒழுங்கா உங்க அப்பாவ நீங்க வர சொல்லு என ரோகினியை சத்தம் போடுவாராம். இதனால் ரோகினி விஜயாவிடம் எப்படி இந்த சிக்கலில் இருந்து தப்பிக்கப் போகிறோம் என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here