முத்து-மீனாவை வசமாக சிக்கலில் மாட்டிவிட்ட சிட்டி.., அடுத்து நடக்கும் விபரீதம் என்ன?? சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!!

0
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து காரை விற்றதற்கு சிட்டி தான் காரணம் என்பதை தெரிந்து கொண்ட மீனா சிட்டியை கடுமையாக எச்சரிக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சிட்டி இனி முத்து-மீனா ஒன்றாக வாழ கூடாது. அவர்களை பிரிக்க வேண்டும் என முடிவு செய்கிறார். இப்படி இருக்கும் சூழலில் மீனாவுக்கு ஒரு கட்சிக்காரர் மூலம் மாலை கட்டுவதற்கு மிகப்பெரிய ஆர்டர் வருகிறது. இதை தெரிந்து கொண்ட சிட்டி நிச்சயம் இதில் ஏதாவது நாம் செய்தால் அந்த கட்சிக்காரனே முத்துவ சும்மா விடமாட்டான் என முடிவு செய்கிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதாவது மீனா நல்லபடியாக தனக்கு கிடைத்த ஆர்டரை செய்து முடிக்கிறார். அதன் பின் முத்து, மீனா இருவரும் அனைத்து மாலைகளையும் ஒரு வேனில் ஏற்றி அந்த கட்சிக்காரர் வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் இடையில் அந்த சிட்டியின் அடியாட்கள் சூழ்ச்சி செய்து அந்த வேனை அங்கிருந்து எடுத்து செல்கின்றனர். மாலை வராததை அறிந்த கட்சிக்காரர் முத்துவை போன் போட்டு மிரட்டுகிறார். அதன் பின் முத்துவுக்கு நடந்த விஷயம் தெரிய வருகிறது. பின் முத்து, மீனா இருவரும் சேர்ந்து எப்படியோ இந்த பிரச்சனைகளை சரி செய்து ஆர்டரை நல்லபடியாக முடித்துக் கொடுக்கின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here