சிம்புவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்த வாரிசு நடிகர் – நன்றி கூறி உருக்கமான பதிவு!!!

0

மலையாள நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ் ஜெயராம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்புவுடன் தான் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து சிம்புவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். அது பற்றிய விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டுபவர் நடிகர் காளிதாஸ் ஜெயராம். தனது ஏழு வயதில் இவர் நடித்த எண்டே வீடு அப்புவிடேயும் என்ற மலையாள திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினை பெற்றவர். சமீபத்தில் இவர் திருநங்கையாக நடித்த பாவ கதைகள் வெப் சீரிஸும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் நடிப்பில் தப்பு பண்ணிட்டேன் என்ற மியூசிக் வீடியோ யூடுயுப்பில் வெளியாகியுள்ளது. அந்த பாடலை பாடியவர் சிம்பு. இந்நிலையில் இப்பாடலை பாடியதற்காக சிம்புவிற்கு காளிதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதனை தன் இன்ஸ்டா பக்கத்தில், எங்களுக்கு அற்புதமான உங்கள் குரல் மூலம் பாடல் வழங்கியமைக்கு மிக்க நன்றி என்ற கேப்ஷனில் சிம்புவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவை பகிர்ந்துள்ளார்.

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here