சென்னையில் கொரோனா தடுப்பூசி ரத்து – மத்திய அரசின் திட்டம்!!!

0

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பரவி வரும் நோயை எதிர்க்க எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்களுக்கு முகாம் அமைத்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சென்னையில் முகாம்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி முகாம்கள்..

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பரவி வந்தன. சென்னை, கோவை, மதுரை, போன்ற ஒரு சில மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் மிக பெரிய அளவில் இருந்தது. பல உயிர்பலிகள் ஏற்பட்டன. இந்நிலையில் பல நடவடிக்கை போராட்டத்திற்கு பின் தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனைவர்க்கும் கொரோனா நோயை எதிர்க்கவும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தடுப்பூசிகள் போட்டு வருகின்றன.

தமிழகத்தில் தடுப்பூசி முகாம்கள்..
தமிழகத்தில் தடுப்பூசி முகாம்கள்..

அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே முகாம்கள் அமைத்து மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன, இந்தியா தயாரிப்பில் வரும் கோவாக்சின் கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு சில தனியார் மருத்துவமனை மூலம் வெளிநாட்டு தடுப்பூசி ஆன ஸ்புட்னிக் வியும் மக்கள் செலுத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னையில் இன்று தடுப்பூசி முகாம்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது…

தமிழகத்தில் தடுப்பூசிகள் தட்டுபாடு அதிகம் இருந்து கொண்டே வருகின்றது. பல மாவட்டங்களில் தடுப்பூசிகளை போட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னையில் தடுப்பூசி பற்றாக்குறையினால் முகாம்கள் தற்காலிகமா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. . இதேபோல் கடந்த வாரமும் தடுப்பூசி இல்லாததால் முகாம்கள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டன மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று தான் முகாம்கள் தொடங்கின, ஆனால் நேற்றும் தடுப்பூசிகள் மிக குறைவாகத்தான் இருந்தன. சென்னையில் மட்டும் இதுவரை 26,50,000க்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

சென்னையில் இன்று தடுப்பூசி முகாம்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது...
சென்னையில் இன்று தடுப்பூசி முகாம்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது…

மக்கள் அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள மிகவும் ஆர்வமாக வரும் இந்நேரத்தில் இப்படி தட்டுப்பாடு ஏற்படுவது மக்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. எனவே இக்காரணத்தினால் இன்று நடைபெற இருந்த அனைத்து முகாம்களும் நிறுத்தியுள்ளதாக சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் அறிவித்துள்ளது. மத்திய அரசு தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைப்பதில் மிக தாமதமளித்து வருகிறது, தமிழகத்திற்கு தடுப்பூசிகளை ஒதுக்காமல் இருக்கிறது, அதனால்தான் தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணமாகும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here