“நான் ஈ” பட நடிகரின் பிறந்த நாளில் ஏற்பட்ட விபரீதம் – ரசிகர்கள் செய்த மோசமான காரியம்!!

0

“நான் ஈ” திரைப்படத்தின் நடிகரான சுதீப், இவரின் 50வது பிறந்த நாள் நேற்று (செப் 02) கொண்டாடப்பட்டது. இதில் அவரை பெருமைப்படுத்த நினைத்து எருமைமாட்டை பலியிட்ட அதிர்ச்சி சம்பவமானது கர்நாடகாவில் நடந்துள்ளது. அந்த சம்பவத்தில்  25 பேர் மீது போலீசார் வழக்கு  பதிவு செய்யதுள்ளனர்.

எருமைமாட்டை பலியிட்ட ரசிகர்கள்:

கன்னட திரையுலகத்தின் பிரபல நடிகரான சுதீப், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர். மேலும் ராஜமௌலியின் “நான் ஈ” படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் மக்களின் மனதில் நீங்காத நடிகராய் நின்றவர். ‘நான் ஈ” திரைப்படம் தெலுங்கிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 
இந்த நிலையில் சமீபமாக இவர் தனது  அறக்கட்டளையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக 133 வருட பழமையான அரசு கன்னட தொடக்கப்பள்ளி சேதமடைந்தை அறிந்து அந்த பள்ளியை தத்தெடுத்துள்ளார். இதனால் மக்களிடையே பெரும் செல்வாக்கை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று (செப் 2) இவரின் பிறந்தநாளை முன்னிட்டு பெல்லாரி மாவட்டம் சந்தூர் கிராமத்து மக்கள் ஒன்று சேர்ந்து கட்அவுட் வைத்தனர். அதில் சில ரசிகர்கள் எருமை மாட்டை பலியிட்டு அதன் ரத்தத்தை கட்அவுட் மீது தெளித்து வழிபாடு செய்தனர். இந்த நிகழ்வால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதன்முலமாக பெல்லாரி நகர் காவல் நிலைய போலீசார் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு மக்களின் எதிர்ப்பை பெற்றுவருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here